Monday 29 October 2018

விரைந்து வருவது உணவா? எமனா? - செயலிகள் மூலம் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் சாலை விதிகளை தொடர்ந்து மீறும் செயலை தடுத்து நிறுத்த காவல்துறையிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு! 73% உணவு விநியோக ஊழியர்கள் சாலை விதிகளை மீறுகின்றனர் - கள ஆய்வில் கண்டுபிடிப்பு!!

வீட்டிலிருந்தபடியே கைபேசி மூலம் நமக்கு தேவையான உணவுகளையும் நமக்கு அருகில் உள்ள உணவகங்களையும் கைபேசியில் காண்பிக்கும் Swiggy, Zomato, FoodPanda, UberEats மற்றும் பல நிறுவனங்களின் கைபேசி செயலிகள் உணவு நுகர்வு சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து, நகர/மாநகரங்களில் அந்நிறுவனங்கள் தங்களின் சேவையை விரிவுப்படுத்தி வருகின்றன. நாட்டில் வேலையின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பகுதி நேர/முழு நேர ஊழியர்களாக வேலை பார்க்க ஒரு வாய்ப்பையும் இந்நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. நிறுவனங்கள் - வாடிக்கையாளர்கள் -  அந்நிறுவன ஊழியர்கள் என இத்துறையின் அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனடையும் வகையில் தொழில் மாதிரி அமைக்கப்பட்டுள்ளதால் இத்துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. உணவு நுகர்வுத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திவரும் இந்நிறுவனங்கள், உடனடி கவனத்தை ஈர்க்கும் பிரச்சனையையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

அவற்றில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட வேண்டியது அந்நிறுவன விநியோகப் பணியாளர்களின் சாலை விதிமீறல் பிரச்சனைகள். ஹெல்மெட் அணியாமை, Earphone அணிந்து செல்வது / ஒருவழி சாலையில் பயணிப்பது, Signal களை மதிக்காமல் அதிவேகமாக செல்வது மற்றும் இதனால் ஏற்படும் விபத்துகள் ஆகியவற்றை நாம் தினந்தோறும் சாலைகளில் கண்டு வருகிறோம். கடந்த சில மாதங்களாக இப்பிரச்னையின் வீரியம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உணவு விநியோக ஊழியர்கள் தொடர்ந்து சாலை விதிகளை மீறுவதால், பல இடங்களில் மோதல்கள் மற்றும் சிறு விபத்துகளை தொடர்ந்து காண முடிகிறது. தொடர்ச்சியாக சாலை விதிகளை  உணவு விநியோக ஊழியர்கள் மீறுவதால், மற்ற இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்சனையால் பெரிய விபத்துகள் ஏற்படும் முன் தகுந்த நேரத்தில் தடுக்க வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் முயற்சி செய்து வருகிறது.

இயக்க தன்னார்வலர்கள் ஐந்து பேர் இணைந்து வேளச்சேரி மற்றும் OMR சாலையில் ஏற்படும் விதிமீறல் எண்ணிக்கை மற்றும் புகைப்பட ஆதாரங்களை களப்பணி மூலம் சேகரித்து மேற்கூறிய நிறுவங்களின் twitter முகவரியில் புகார் அளிக்கப்பட்டது. 73% உணவு விநியோக ஊழியர்கள் ஏதாவது ஒரு வகையில் சாலை விதிகளை மீறுவதை கள ஆய்வு உறுதிப்படுத்தியது.  இணையவாசிகள் மத்தியில் வெளிப்படையாக புகார் கூறியதும் உடனடியாக தங்கள் நிறுவன ஊழியர்களிடம் அறிவுறுத்துவதாக பதிலளித்ததோடு இந்நிறுவங்கள் நிறுத்திக்கொண்டன. அந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு கடந்த 22/10/2018 அன்று புகார் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. விபத்துகளின் விகிதம் அதிகமுள்ள தெற்கு சென்னை ஆணையர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. (மனுவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது).

மேலும், விநியோகப் பணியாளர்களுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் தகுந்த அறிவுரை மற்றும் எச்சரிக்கையை போக்குவரத்து காவலர்கள் வழங்க உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விநியோகப் பணியாளர்களை மருத்துவமனையில் விபத்து பிரிவிற்கு நேரில் அழைத்து சென்று விதிமீறலால் ஏற்படும் தேவையற்ற இன்னல்கள் குறித்து நேரடியாக விளக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது  போன்ற புது பிரச்சனைகளை கையாள மோட்டார் வாகன சட்டத்தில் தகுந்த திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து வைத்தோம்.

இயக்கத்தின் சார்பாக Swiggy நிறுவனத்திற்கும் நேரில் சென்று அவர்களின் விநியோகப் பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க கூறியுள்ளோம். (மனு இணைக்கப்பட்டுள்ளது) மேலும், Order செய்யப்பட்ட 30 நிமிடத்திற்குள் உணவு பண்டங்களை விநியோகிக்க வேண்டுமென உள்ள எதிர்பார்ப்பை போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம். விநியோகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் வணிக மாதிரியை அமைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

காவல்துறையும் Swiggy மற்றும் பிற நிறுவனங்களும் விநியோகப் பணியாளர்கள் சாலைகளில் விதிமீறலின்றி பயணிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க உடனடியாக ஆவண செய்யவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

செந்தில் ஆறுமுகம்
பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்


ENGLISH VERSION:

Restaurant search and food delivery applications like Swiggy, Zomato, FoodPanda, UberEats etc. have created a  revolution in the food industry by providing a user friendly app-based food ordering and by delivering food at the doorstep. These platforms have created thousands of job opportunities to the employment-deprived youth of the country. After the phenomenal success of the delivery service in the metropolitan cities, the companies have begun to penetrate the tier 2 and tier 3 cities. As the market size of these companies grow larger day by day, it creates a win-win situation for the consumers, delivery boys and entrepreneurs. That being said, however, there is a looming problem that needs to be addressed!

To make more incentives and get better ratings, delivery boys violate traffic rules at ease. Needless to say, the issue multiplies during the peak hours. This in turn creates a huge havoc in the roads, widely noticed in the past few months. Not wearing helmets, riding with headphones, violating one-ways, overspeeding and jumping signals have become the new norm for these delivery boys. Face-offs between delivery boys and riders and minor accidents has become a part of the day to day life in Chennai. Before the rate and the degree of accidents sky-rocket because of the issue, Satta Panchayat Iyakkam (SPI) wants the timely addressal of the issue.

A team of 5 members from SPI conducted a field study to collect the violation rate and photos in the Velachery and OMR areas. It was found out that atleast 73% of the delivery boys violate the traffic rules in someway in our field survey. With these evidences and ground work, SPI issued complaints via twitter to the delivery apps in order to address the issue. Though Swiggy's twitter team was lightening quick to respond there were no changes made in the field, as one could still observe Swiggy’s team violating the traffic rules. So, We escalated the issue to the Chennai Police and has lodged a number of complaints and petitions to the Chennai Police on the same, on 22nd October 2018. SPI has also sent a copy of the complaint letter (attached herewith) to Mr. A.K. Vishwanathan, Commissioner of Police, Chennai,.

SPI has requested the Traffic Police to issue strong orders to the violating delivery companies and delivery boys so that they will not violate the rules. We have also asked the City Police to take the delivery boys to the accident wards in hospitals to emphasize on the serious repercussions of traffic violation. We have also asked the Police officials to draft the new rules and regulations for the industry and requested them to make necessary changes in the Motor vehicle act 1988 to deal the habitual offenders.

SPI also met with the Swiggy Team to appraise them on the dangers of violating traffic rules. SPI requested them to set the customer expectations right so that delivery boys will not be under unnecessary pressure that leads to such dangerous violations. SPI also suggested to relax the 30 minutes delivery window so that the delivery boys will have ample time for delivery. SPI volunteers to conduct awareness sessions among the delivery boys from time to time to create awareness on the impact these acts will have on precious lives.

Satta Panchayat Iyakkam requests the Chennai City Police and the Chennai Traffic Cops to take necessary actions to the control the menace, the delivery boys have been creating in the past few months. SPI also wants the Swiggy and other food delivery companies to alter their work culture for a larger good.

Senthil Arumugam

General Secretary, Satta Panchayat Iyakkam

No comments:

Post a Comment