Wednesday 5 December 2018

மேகதாது -சிறப்பு சட்டமன்ற கூட்டம் - நேரடி ஒளிபரப்பு - சட்ட பஞ்சாயத்து- சபாநாயகருக்கு மனு

கேரளாவில் சட்டமன்றம் இணையத்தில், நேரலை..கர்நாடகாவில் அனைத்து டிவிக்களிலும் சட்டமன்றம் ஒளிபரப்பு.. தமிழகத்தில்..?





05-12-2018
சென்னை
அனுப்புநர்:
செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
H42/3,மேற்கு அவென்யூ,
காமராஜ் நகர், திருவான்மியூர்,
சென்னை-600041
87545-80274

பெறுநர்:
1. சபாநாயகர்
2. சட்டசபைச் செயலாளர்,
3. தலைமைச் செயலாளர்
4. முதலமைச்சர்
தலைமைச் செயலகம்,
சென்னை-600009

வணக்கம்,
பொருள்: மேகதாது-சிறப்பு சட்டமன்றக் கூட்டம்- தொலைக்காட்சி, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு கோரி...

தமிழக கவர்னர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையின்படி நாளை(06-12-2018) மாலை 4 மணிக்கு, தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் நடைபெற இருப்பதாக அறிய வருகிறேன். மேகதாது அணை கட்ட
கர்நாடக அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து விவாதித்து, தீர்மானம் இயற்றுவதற்காக இக்கூட்டம் கூட உள்ளதாகவும் அறிகிறேன்.

தமிழக டெல்டா பகுதிகள் கஜா புயலால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது. இந்த சூழலில், காவிரியில் நமக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீர் உரிய அளவில் கிடைக்கவில்லை என்றால், அது விவசாயிகளுக்கு மட்டுமல்ல அதைக் குடிநீராகப் பயன்படுத்தும் பல இலட்சம் பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை உணர்ந்து, இதுகுறித்து தமிழக அரசு சட்டசபையில் சிறப்புக்கூட்டம் நடத்துவது வரவேற்கத்தக்க  நல்ல முயற்சியே..!!

இந்த சிறப்புக்கூட்டத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரதிநிதிகளாக ஆளுங்கட்சி,எதிர்கட்சி,கூட்டணிக்கட்சிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் தங்கள் நிலைப்பாடுகளை,கருத்துக்களை முன்வைத்துப் பேச உள்ளார்கள். மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் வாதங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேரவேண்டும் என்று கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கு தங்கள் பிரதிநிதிகளின் சட்டமன்ற செயல்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள உரிமையும் உண்டு. இதனைச் சாத்தியமாக்க, இந்த சிறப்புச் சட்டமன்ற நிகழ்வை நேரடியாக தொலைக்காட்சி, இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.

மேகதாது அணை பிரச்னை மற்றும் அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஆளுங்கட்சி, எதிர்கட்சியினர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம் கடைக்கோடி டெல்டா கிராமத்தில் உள்ள விவசாயி கூட தன்னுடைய பிரச்னை பற்றி சட்டமன்றத்தில் என்ன கருத்து முன்வைக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்ள இயலும். மேலும், செய்தியை விரிவாகப் பதிவு செய்ய ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கும். 

கேரளா-கர்நாடகாவில் நேரடி ஒளிபரப்பு:
பக்கத்து மாநிலமான கேரளாவில் சட்டமன்ற நிகழ்வுகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ( http://103.251.43.36/indexnew.htm?source=rtmp://103.251.43.36/live/livestream&type=vod ). தற்போதுகூட கேரளத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது(டிசம்பர் 13 வரை). கேரள அரசு சட்டசபையின் இணையதளத்தில், சபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு கொடுக்கப்படுவதோடு, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் பேசியவற்றையும் இணையத்தில் வீடியோக்களாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விவாத்தில்(04-12-2018) பேசிய 33 எம்.எல்.ஏக்களின் வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் உள்ளது, யார் வேண்டுமானாலும் இதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

IMG-20181205-WA0110.jpg
   ( கேரளாவில் இணையத்தில் நேரலையில் சட்டமன்றம் )
கர்நாடகாவின் சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. இந்த வழிமுறையைத் தமிழகமும் பின்பற்றினால், மாநில அரசிற்கு எந்தவித செலவுமின்றி சட்டசபை நிகழ்வுகளை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பார்க்கச்செய்ய முடியும்.

இதனைக் கருத்தில்கொண்டுதான், நாடாளுமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதுபோல்,  சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி 2012ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தோம்(WP14824/2012 - வழக்கு தொடுத்த குழுவில் நானும் ஒருவன்). தமிழக அரசு பல்வேறு காரணங்களை முன்வைத்து நேரடி ஒளிபரப்பு தர மறுத்துவருவதும், இவ்வழக்கு நிலுவையில் இருப்பதும் உங்களுக்கு நன்கு தெரியும். 

சட்டமன்றத்தின் சிறப்பு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று எங்கள் வழக்கிற்கு சட்டசபை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில்(03-09-2012) குறிப்பிடப்பட்டுள்ளது. கவர்னர் உரை, பட்ஜெட் உரை போன்ற சிறப்பு நிகழ்வுகள் ஏற்கனவே நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த அடிப்படையில், மேகதாது அணை குறித்து நாளை(06-12-2018) நடைபெறவுள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கோருகிறோம். ( உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்  செய்த பதில் மனுவின்படி, மேகதாது குறித்தான இச்சிறப்பு நிகழ்வானது நேரடி ஒளிபரப்பு கொடுக்கப்பட்டதா இல்லையா என்பதைக் குறிப்பிட்டு, அடுத்த விசாரணையின்போது  நாங்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.)

எங்களின் பொதுநலவழக்கிற்கு, நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணத்தின்படியும், கடைக்கோடி விவசாயி ஒருவரும் தன்னுடைய பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் என்ன பேசப்பட்டது என்பதை ”முழுமையாக” அறியும் உரிமை அந்த விவசாயிக்கு உள்ளது என்ற அடிப்படையிலும் நாளை சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள “மேகதாது அணை” குறித்தான சிறப்பு விவாதம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஜனநாயகம் என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களுடைய அரசாங்கம். இதில் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு தருவதோ;  தனியார் தொலைக்காட்சிகள் சட்டசபை நிகழ்வுகளை முழுமையாகப் படம்பிடிக்க அனுமதிப்பதோ, எதுவாக இருந்தாலும் அதுபோன்றதொரு நிகழ்வு இதுதான் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இருக்கும். அப்படிப்பட்டதொரு முதல் முயற்சியை தாங்கள் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சமயத்தில், “சிறப்பு நிகழ்வுகள்” மட்டுமில்லாமல் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் முழுமையாக நேரடி ஒளிபரப்பக் கோரும் எங்களது பொதுநல மனு மீதான அடுத்த விசாரணையின் போது, இதற்கு அரசு தயாராக உள்ளது என்று சாதகமான பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி !! 

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்
87545-80274

Friday 23 November 2018

Rs.2400Cr KICKBACKS in NOON MEAL SCHEME ? Representation of Satta Panchayat to IT Dept..HANDOVER DOCS TO STATE,CENTRAL GOVT for VIGILANCE ENQUIRY..

Satta Panchayat Iyakkam's representation to Income Tax Department

24-11-2018, Chennai

From :                                                                                                    

Senthil Arumugam,
General Secretary,
Satta Panchayat Iyakkam,
H42/3, West Avenue,
Kamaraj Nagar, Thiruvanmiyur,
Chennai - 600041
Cell: 87545-80274, 87545-80270

To:

1.    Director General of Income Tax (Intelligence & Criminal Investigation)
2.    Director General of Income Tax (Investigation)
3.    Principal CCIT - Tamil Nadu Region
4.    Principal Director General of Income Tax (Vigilance)/CVO


Sir,

Sub:
Immediate handover of documents seized  from Tamilnadu noon meal scheme supplier - to Central & State Govt

Ref:  
News in “The Hindu” dated 24-11-2018 with the title "Politicians,Officials figure in TN.Noon Meal Scam" ( https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-noon-meal-scam-income-tax-seizures-reveal-payment-of-2400-crore-in-kickbacks-to-politicians-officials/article25581635.ece)

Today, a news article is being published in the first page of “THE HINDU” news paper with regard to the nexus between a major supplier of food items to noon meal scheme implemented by Tamilnadu Government and politicians, bureaucrats (Refer link given above). It is shocking to read that the supplier gave kickbacks worth of Rs.2400 crore to politicians and officials. As per the news article, there is a mention about name of politicians, officials and their relatives in the seized documents ( in the form of  “code word”). As an Anti Corruption organisation and a movement advocates for Good Governance, we see this as a serious issue in two aspects. One, illegal nexus between politicians, officials and a supplier which may possibly lead to a scam. Two, possibility of poor quality food supply to noon meal scheme(due to corruption) which is being implemented for more than 50lakhs students.  Since the issue is related to a possible scam involved in the food supply consumed by 50lakh school students, we request the Income Tax department to take the following actions, immediately:

1.     1.   Immediate hand over of documents with code names which refer to politicians, officials and their relatives to Tamilnadu Government and Central Government for their further action.( It is to be noted that your department had seized the respective documents in July 2018 and it is not being forwarded to concerned Governments, even after 4 months. ) Considering the high level criminal aspect of the case, we request your department to take immediate action on our request. (Upon your sending, we are going to request the state and central Government to initiate a proper enquiry about the scam)

2.     2.  Your investigation in the last 4 months may have revealed the name of the real persons behind the “code word”. If so, immediately conduct Income raid in the home/office of those politicians or officials.                                                                                                                                                                                      
                                                                                                                                                                       Thanks,
                                                                                                                                                
                                                                                                                                                                       Senthil Arumugam

Tuesday 30 October 2018

”உள்ளாட்சித் தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்..?” - செந்தில் ஆறுமுகம் கட்டுரை

”உள்ளாட்சித் தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்..?” தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்றம் கேட்ட கேள்வி இது. ஒட்டுமொத்த தமிழக மக்களும், சமூக ஆர்வலர்களும், பல அரசியல் கட்சிகளும் கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்டுவரும் கேள்வியும் இதுவே.
என்னதான் பிரச்னை?
இந்திய அரசியல் சாசனத்தின் 73 வது மற்றும் 74வது திருத்தத்தின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளான கிராமப் பஞ்சாயத்துகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு முறையாகத் தேர்தல் நடத்தப்படவேண்டும். இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பொறுப்பான அமைப்பு “மாநிலத் தேர்தல் ஆணையம்” ஆகும். 1996 முதல், உள்ளாட்சித் தேர்தல்கள் எந்தப்பிரச்னையும் இன்றி 2001, 2006, 2011 என 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்தன. 2011ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்தோடு நிறைவடைந்தது. எனவே, மாநிலத் தேர்தல் ஆணையம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டி தேர்தல் தேதிகளை அறிவித்தது. 17.10.2016, 19.10.2016 ஆகிய நாட்களில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டன. கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள், சுயேச்சைகள் என அனைத்துத் தரப்பினரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் முடிந்த இறுதி நாளுக்கு அடுத்த நாளன்று(அக் 4,2016) சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கிறது. ஏன் ? உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் முறையாகப் பின்பற்றாமல் அவசரகோலத்தில் தேர்தலை அறிவித்த முறை சட்டத்திற்குப் புறம்பானது என்ற முடிவுக்கு உயர்நீதிமன்றம் வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், திமுக தொடர்ந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,. ஆனால், திமுக போட்ட வழக்கு என்னவெனில் பழங்குடியினருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முறையான பிரதிநிதித்துவம்/இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை என்பதுதான். ஆனால், திமுகவின் இடஒதுக்கீடு குறித்தான வாதத்தை ஏற்காத நீதிமன்றம் மேற்சொன்ன வேறொரு காரணத்திற்காக உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்தது. அதேசமயத்தில், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி டிசம்பர் 31க்குள் தேர்தலை நடத்திமுடிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது நீதிமன்றம். அதாவது, டிசம்பர் 2016க்குள் தேர்தலை நடத்திமுடிக்கவேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆனால், மாநிலத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசின் அணுகுமுறைகளைப் பார்த்தால் டிசம்பர் 2019க்குள் கூட தேர்தல் நடத்தி முடிக்கப்படாது என்பதுபோல் தெரிகிறது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தல் நடத்தப்படாத இந்தப் பின்னணியில்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தி.மு.க.வால் தொடுக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போதுதான் நீதிமன்றம் “…”உள்ளாட்சித் தேர்தலை எப்போதுதான் நடத்துவீர்கள்..?” என்று கேள்வி கேட்டதோடு, இத்தேர்தல் நடத்தப்படாமல் போனதற்குக் காரணமான உயரதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
திமுக உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மற்றொரு வழக்கை(2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு வரையறைகள் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி) கெட்டியாகப் பிடித்துக்கொண்ட தமிழக அரசு, 2011 மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின் எல்லைகள் மாற்றப்பட உள்ளன. அதனால், புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படவேண்டும். இந்தப் பணிகள் முடிந்தபிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்தமுடியும் என்று கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளாக கிளிப்பிள்ளை போல் நீதிமன்றத்தில் பதிலளித்து வருகிறது தமிழக அரசு. ஆனால்,
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவை தமிழக அரசு சொல்லும் எந்தக்காரணங்களும் ஏற்புடையவை அல்ல, உடனே தேர்தலை நடத்துங்கள் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டது.
நீதிமன்றங்கள் இவ்வளவு வலியுறுத்தியும் தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயங்குவது ஏன்.? காரணம் சட்டச்சிக்கல் அல்ல, அரசியல் சிக்கல். இரட்டை இலைச் சின்னம் பெற்ற பிறகும் ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வந்தால் முதல்வர், துணைமுதல்வர் அணிகளுக்கு இடையே உள்ள பிளவு அப்பட்டமாய் வெளிச்சத்திற்கு வரும். எந்த அணிக்கு எவ்வளவு சீட் கொடுப்பது என்பதில் இழுபறி நிலை ஏற்படும். ஒருவேளை, ஆர்.கே. நகரில் தோற்றதுபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் பல இடங்களில் தோல்வியைத் தழுவினால் அது ஆளுங்கட்சிக்கு அவமானமாகிவிடும். அது அடுத்த ஆண்டு வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, “உள்ளாட்சித்” தேர்தல் நடத்தினால் “உள்ள” ஆட்சியும் ஆட்டம் கண்டுவிடுமோ என்று அதிமுக அரசு தேர்தல் கணக்குப்போடுகிறது. இதுபோன்ற அரசியல் காரணங்களாலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. உண்மையில் சட்டச்சிக்கல் ஏதுமில்லை.
”மாநில சுயாட்சி” வேண்டி உரத்த குரல்கொடுத்த தமிழகம் இன்று “கிராம சுயாட்சியை” புறந்தள்ளுவது வேதனையளிக்கிறது. மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்படக்கூடாது, அது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கோரினோம் நாம். ஆனால், மாநிலத்தின் அதிகாரங்களை உள்ளாட்சி அமைப்புகளோடு பகிர்ந்துகொள்ள தமிழகம் தயாராக இல்லை என்பதையும் தாண்டி உள்ளாட்சித் தேர்தலையே நடத்ததாமல் 2 ஆண்டுகள் இழுத்தடித்துவிட்டு, தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று உள்ளாட்சித் தேர்தல் அந்தரத்தில் தொங்கும் நிலை வேதனையின் உச்சகட்டம்.
04.10.2016 அன்று உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டார் நீதிபதி.கிருபாகரன் அவர்கள். அந்தத் தீர்ப்பின் தொடக்கத்தில் மகாத்மா காந்தியின் இந்த வரிகளை மேற்கோள் காட்டினார்:
“.… உண்மையான ஜனநாயகம் என்பது மத்தியிலும், மாநிலத்திலும் ஒருசிலர் அமர்ந்துகொண்டு ஆட்சி செய்வதல்ல. அது, ஒவ்வொரு கிராம மக்களும் ஆட்சியில் பங்கேற்பதே”
காந்தியின் கனவுப்படி, அனைத்து மக்களும் ஆட்சியில் பங்கேற்க வழிவகுக்கும் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் இனியும் தாமதிக்காமல் நடத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

- செந்தில் ஆறுமுகம்

Monday 29 October 2018

உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போவதற்குக் காரணம் அதிமுக அரசு பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) காரணம்..!!

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்குக் காரணம் அதிமுக அரசு  பிறப்பித்த அவசரச் சட்டமே(Ordinance) காரணம்..!!  உயர்நீதிமன்றத்தின் கண்டிப்பிற்கு ஆளான தமிழக அரசு, உச்சநீதிமன்றத்திலும் அசிங்கப்பட்டு தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தாமல் இருக்க உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் !!   திங்கட்கிழமை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அவசரச் சட்டம் இயற்றி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதைத் தள்ளிப்போடுவதில் காட்டிய வேகத்தை”,”சட்ட நுணுக்கத்தைவிரைவாக தேர்தல் நடத்தப்படுவதில் காட்டவேண்டும்.  - சட்ட பஞ்சாயத்து இயக்கம் குற்றச்சாட்டு, கோரிக்கை

மீண்டுமொருமுறை தமிழக அரசின் தலையில் கொட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்.  இந்த வாரத்தில் இது இரண்டாவது முறை. லோக் ஆயுக்தா ஏன் இன்னும் அமைக்கப்படவில்லை என்று இரு நாட்களுக்கு முன்னர் தமிழக அரசைக் கேள்விகேட்ட உச்சநீதிமன்றம், இன்று   உள்ளாட்சித் தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை என்று கேள்வி கேட்டு 4 வாரத்திற்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத தமிழக அரசு, இதற்குச் சொல்லிவரும் காரணம் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியிலான வார்டு மறுவரையறைகள் முடிக்கப்படவேண்டும் என்பதே. இது பச்சைப் பொய். உடனடியாக தேர்தல் நடத்தப்படாமல் இருக்க அதிமுக கண்டுபிடித்த காரணம்.  பழங்குடியினருக்கு உரிய தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று கூறி திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இக்காரணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு பஞ்சாயத்துராஜ் சட்டம்,1994ல் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவசர கோலத்தில் தேர்தல் நடத்தப்பட்டது சட்டவிதிவீறல் என்ற அடிப்படையில் 04-10-2016 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ரத்துசெய்தது. 

கூடவே, குறைபாடுகளைச் சரிசெய்து டிசம்பர் 31,2016க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறியது.
 அதேசமயத்தில்,  2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும், அதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடைவிதிக்கவேண்டும் என்று கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் “..எந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படவேண்டும்என்பதுபோன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடத்தப்படுவதற்கு தடை விதிக்க முடியாதுஎன்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அதாவது, 2011 மக்கள்தொகை அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது கட்டாயம் கிடையாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. பிறகு எந்த அடிப்படையில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வார்டுவரையறைகள் முடிந்தபின்புதான் 
தேர்தலை நடத்துவோம் என்று அதிமுக அரசு
  தொடர்ந்து சொல்கிறது...?
 
பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும்வழியை தமிழக அரசு பின்பற்றியது என்றால் மிகையில்லை. ஆம், டிசம்பர் 31,2016க்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன் அவர்களின் உத்தரவைப் பின்பற்றப்படவில்லை, உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடப்படவேண்டும் என்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 04-09-2017 அன்று தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது(இத் தீர்ப்பில்தான் நவம்பர்17,2017க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்திமுடிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது) . 04-09-2017, அதாவது திங்கட்கிழமையன்று, உயர்நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு ஒரு நாள் முன்னர், அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று(03-09-2017) அவசர,அவசரமாக ஒரு அவசரச் சட்டத்தை(Ordinance) பிறப்பித்தது தமிழக அரசு (TAMIL NADU ORDINANCE No. 4 OF 2017). 
அந்த அவசரச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டது?
 
5 சட்டங்கள் இந்த அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டிருந்தது (1. Chennai City Municipal Corporation Act, 1919,
  2. The Madurai City Municipal Corporation Act, 1971, 3. The Coimbatore City Municipal Corporation Act, 1981, 4.Tamil Nadu District Municipalities Act, 1920  5. Tamil Nadu Panchayats Act, 1994). 

எதற்காக இந்த 5 சட்டங்கள் திருத்தப்பட்டன ?
  
தமிழக அரசு, 2011 மக்கள்தொகை அடிப்படையில்
  வார்டு வரையறைகள் முடித்தபின்புதான் தேர்தல் நடத்தமுடியும் என்று தொடர்ந்து பொய்சொல்லிவந்தது. ஆனால், இப்போது நடைமுறையில் உள்ள உள்ளாட்சிச் சட்டங்கள் தமிழக அரசின் வாதத்திற்கு எதிராக இருந்தது. தன்னுடைய பொய்வாதத்திற்கு உதவாத சட்டப்பிரிவுகளை நீக்கிவிட்டால், திங்கட்கிழமையன்று(04-09-17) நீதிமன்றத்தில் தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தது தமிழக அரசு. ஞாயிற்றுக்கிழமையன்று(03-09-17) அவசர அவசரமாக, 5 சட்டங்களைத் திருத்தி அவசரச் சட்டம் இயற்றியது. எடுத்துக்காட்டாக, 12524 கிராமப் பஞ்சாயத்துகள் தொடர்பான திருத்தத்தின் வரிகள் இப்படி இருந்தது.   ...."In the Tamil Nadu Panchayats Act, 1994, sections 28-A, 28-AA and 28-AAA shall be omitted." . அதாவது, பிரிவு 28-A,28-AA,28-AAA ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டது. இந்தப்பிரிவுகளின்படி வார்டு வரையறைகளில் மாற்றம் ஏதும் செய்யாமல், இப்போதுள்ள வார்டு வரையறைகளின் படியே தேர்தல் நடத்தலாம் என்பதுதான்..!!  
ஆக, இப்போது இருக்கும் சட்டத்தின்படி, எந்த மாற்றமும் வார்டுகளில் செய்யவேண்டியதில்லை. ஆனால், தமிழக அரசிற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் விருப்பமில்லை. இரட்டை இலை
  சின்னம் கிடைத்தபின்னும், ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியான அதிமுக தோற்றது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்க அதிமுக அரசால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த பொய்யைநியாயப்படுத்த ஒரு அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், 04-09-2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி அவர்கள் முன்பு நடைபெற்ற வாதத்தில் “...தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளதால், எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. உடனடியாகத் தேர்தலை நடத்த முடியாதுஎன்று மாநிலத் தேர்தல் ஆணையம் வாதிட்டது. (ஆனாலும், இவ்வாதங்களை ஏற்காமல், நவம்பர்17,2017க்குள் தேர்தலை நடத்துங்கள் என்று இந்திரா பேனர்ஜி அவர்கள் உத்தரவிட்டார் என்பது வேறு விவகாரம்). இது பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் வேலைதானே ?
அதிமுக அரசின் அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சிச் சட்டத்தைத் திருத்திவிட்டு, நீதிமன்றத்தில் வந்து “... உள்ளாட்சிச் சட்டதிருத்தத்தின்படி, 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறைகள் முடிவுற்ற பின்னர்தான் தேர்தல் நடத்தமுடியும்என்று சட்ட நுணுக்கம் !?” பேசுகிறது அதிமுக அரசு.
 
சரி... விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட என்ன செய்யவேண்டும் ?

1. 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறைகள் மாற்றும் பணி விரைவாக முடிக்கப்பட்டு, ஓரிரு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
2.
  2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து முடிப்பதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்று தமிழக அரசு கருதினால், இப்போதுள்ள வார்டு வரையறைகளின் அடிப்படையிலேயே உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் (  03-09-2017 அன்று நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டால்,  இப்போதுள்ள வார்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்த சட்டசிக்கல் எதுவும் வராது )
லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர பல ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல்கொடுத்த வந்தபோதும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் அச்சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது.
  அதேபோல், உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள், பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியும் தமிழக அரசு அதைச் செய்யவில்லை. இப்போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டம் இயற்றப்படுவதையும், சட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும்தான் செய்யும் என்றால், மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்
  தமிழகத்தில் ஆட்சி எதற்கு..? அரசு எதற்கு...?” 
மாநில சுயாட்சிக்காகக் உரத்துக் குரல்கொடுத்த அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் ஆளும் அதிமுக அரசு, “கிராம சுயாட்சியைத் துச்சமென மதிப்பது கொடுமையிலும் கொடுமை.
உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பாக, உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவேண்டும் என்று மீண்டுமொருமுறை தமிழக அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்

விரைந்து வருவது உணவா? எமனா? - செயலிகள் மூலம் உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் சாலை விதிகளை தொடர்ந்து மீறும் செயலை தடுத்து நிறுத்த காவல்துறையிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு! 73% உணவு விநியோக ஊழியர்கள் சாலை விதிகளை மீறுகின்றனர் - கள ஆய்வில் கண்டுபிடிப்பு!!

வீட்டிலிருந்தபடியே கைபேசி மூலம் நமக்கு தேவையான உணவுகளையும் நமக்கு அருகில் உள்ள உணவகங்களையும் கைபேசியில் காண்பிக்கும் Swiggy, Zomato, FoodPanda, UberEats மற்றும் பல நிறுவனங்களின் கைபேசி செயலிகள் உணவு நுகர்வு சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து, நகர/மாநகரங்களில் அந்நிறுவனங்கள் தங்களின் சேவையை விரிவுப்படுத்தி வருகின்றன. நாட்டில் வேலையின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பகுதி நேர/முழு நேர ஊழியர்களாக வேலை பார்க்க ஒரு வாய்ப்பையும் இந்நிறுவனங்கள் உருவாக்கியிருக்கின்றன. நிறுவனங்கள் - வாடிக்கையாளர்கள் -  அந்நிறுவன ஊழியர்கள் என இத்துறையின் அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனடையும் வகையில் தொழில் மாதிரி அமைக்கப்பட்டுள்ளதால் இத்துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. உணவு நுகர்வுத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திவரும் இந்நிறுவனங்கள், உடனடி கவனத்தை ஈர்க்கும் பிரச்சனையையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

அவற்றில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட வேண்டியது அந்நிறுவன விநியோகப் பணியாளர்களின் சாலை விதிமீறல் பிரச்சனைகள். ஹெல்மெட் அணியாமை, Earphone அணிந்து செல்வது / ஒருவழி சாலையில் பயணிப்பது, Signal களை மதிக்காமல் அதிவேகமாக செல்வது மற்றும் இதனால் ஏற்படும் விபத்துகள் ஆகியவற்றை நாம் தினந்தோறும் சாலைகளில் கண்டு வருகிறோம். கடந்த சில மாதங்களாக இப்பிரச்னையின் வீரியம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. உணவு விநியோக ஊழியர்கள் தொடர்ந்து சாலை விதிகளை மீறுவதால், பல இடங்களில் மோதல்கள் மற்றும் சிறு விபத்துகளை தொடர்ந்து காண முடிகிறது. தொடர்ச்சியாக சாலை விதிகளை  உணவு விநியோக ஊழியர்கள் மீறுவதால், மற்ற இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்சனையால் பெரிய விபத்துகள் ஏற்படும் முன் தகுந்த நேரத்தில் தடுக்க வேண்டுமென சட்ட பஞ்சாயத்து இயக்கம் முயற்சி செய்து வருகிறது.

இயக்க தன்னார்வலர்கள் ஐந்து பேர் இணைந்து வேளச்சேரி மற்றும் OMR சாலையில் ஏற்படும் விதிமீறல் எண்ணிக்கை மற்றும் புகைப்பட ஆதாரங்களை களப்பணி மூலம் சேகரித்து மேற்கூறிய நிறுவங்களின் twitter முகவரியில் புகார் அளிக்கப்பட்டது. 73% உணவு விநியோக ஊழியர்கள் ஏதாவது ஒரு வகையில் சாலை விதிகளை மீறுவதை கள ஆய்வு உறுதிப்படுத்தியது.  இணையவாசிகள் மத்தியில் வெளிப்படையாக புகார் கூறியதும் உடனடியாக தங்கள் நிறுவன ஊழியர்களிடம் அறிவுறுத்துவதாக பதிலளித்ததோடு இந்நிறுவங்கள் நிறுத்திக்கொண்டன. அந்நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரு.விஸ்வநாதன் அவர்களுக்கு கடந்த 22/10/2018 அன்று புகார் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. விபத்துகளின் விகிதம் அதிகமுள்ள தெற்கு சென்னை ஆணையர் மற்றும் காவல்துறை ஆய்வாளர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. (மனுவின் நகல் இணைக்கப்பட்டுள்ளது).

மேலும், விநியோகப் பணியாளர்களுக்கும் அந்தந்த நிறுவனங்களுக்கும் தகுந்த அறிவுரை மற்றும் எச்சரிக்கையை போக்குவரத்து காவலர்கள் வழங்க உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விநியோகப் பணியாளர்களை மருத்துவமனையில் விபத்து பிரிவிற்கு நேரில் அழைத்து சென்று விதிமீறலால் ஏற்படும் தேவையற்ற இன்னல்கள் குறித்து நேரடியாக விளக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது  போன்ற புது பிரச்சனைகளை கையாள மோட்டார் வாகன சட்டத்தில் தகுந்த திருத்தங்கள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்து வைத்தோம்.

இயக்கத்தின் சார்பாக Swiggy நிறுவனத்திற்கும் நேரில் சென்று அவர்களின் விநியோகப் பணியாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க கூறியுள்ளோம். (மனு இணைக்கப்பட்டுள்ளது) மேலும், Order செய்யப்பட்ட 30 நிமிடத்திற்குள் உணவு பண்டங்களை விநியோகிக்க வேண்டுமென உள்ள எதிர்பார்ப்பை போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம். விநியோகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற் போல் வணிக மாதிரியை அமைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

காவல்துறையும் Swiggy மற்றும் பிற நிறுவனங்களும் விநியோகப் பணியாளர்கள் சாலைகளில் விதிமீறலின்றி பயணிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க உடனடியாக ஆவண செய்யவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

செந்தில் ஆறுமுகம்
பொது செயலாளர், சட்ட பஞ்சாயத்து இயக்கம்


ENGLISH VERSION:

Restaurant search and food delivery applications like Swiggy, Zomato, FoodPanda, UberEats etc. have created a  revolution in the food industry by providing a user friendly app-based food ordering and by delivering food at the doorstep. These platforms have created thousands of job opportunities to the employment-deprived youth of the country. After the phenomenal success of the delivery service in the metropolitan cities, the companies have begun to penetrate the tier 2 and tier 3 cities. As the market size of these companies grow larger day by day, it creates a win-win situation for the consumers, delivery boys and entrepreneurs. That being said, however, there is a looming problem that needs to be addressed!

To make more incentives and get better ratings, delivery boys violate traffic rules at ease. Needless to say, the issue multiplies during the peak hours. This in turn creates a huge havoc in the roads, widely noticed in the past few months. Not wearing helmets, riding with headphones, violating one-ways, overspeeding and jumping signals have become the new norm for these delivery boys. Face-offs between delivery boys and riders and minor accidents has become a part of the day to day life in Chennai. Before the rate and the degree of accidents sky-rocket because of the issue, Satta Panchayat Iyakkam (SPI) wants the timely addressal of the issue.

A team of 5 members from SPI conducted a field study to collect the violation rate and photos in the Velachery and OMR areas. It was found out that atleast 73% of the delivery boys violate the traffic rules in someway in our field survey. With these evidences and ground work, SPI issued complaints via twitter to the delivery apps in order to address the issue. Though Swiggy's twitter team was lightening quick to respond there were no changes made in the field, as one could still observe Swiggy’s team violating the traffic rules. So, We escalated the issue to the Chennai Police and has lodged a number of complaints and petitions to the Chennai Police on the same, on 22nd October 2018. SPI has also sent a copy of the complaint letter (attached herewith) to Mr. A.K. Vishwanathan, Commissioner of Police, Chennai,.

SPI has requested the Traffic Police to issue strong orders to the violating delivery companies and delivery boys so that they will not violate the rules. We have also asked the City Police to take the delivery boys to the accident wards in hospitals to emphasize on the serious repercussions of traffic violation. We have also asked the Police officials to draft the new rules and regulations for the industry and requested them to make necessary changes in the Motor vehicle act 1988 to deal the habitual offenders.

SPI also met with the Swiggy Team to appraise them on the dangers of violating traffic rules. SPI requested them to set the customer expectations right so that delivery boys will not be under unnecessary pressure that leads to such dangerous violations. SPI also suggested to relax the 30 minutes delivery window so that the delivery boys will have ample time for delivery. SPI volunteers to conduct awareness sessions among the delivery boys from time to time to create awareness on the impact these acts will have on precious lives.

Satta Panchayat Iyakkam requests the Chennai City Police and the Chennai Traffic Cops to take necessary actions to the control the menace, the delivery boys have been creating in the past few months. SPI also wants the Swiggy and other food delivery companies to alter their work culture for a larger good.

Senthil Arumugam

General Secretary, Satta Panchayat Iyakkam