English Press Release can be found below..
ஆசிரியர் பணி நியமனங்களில்
வெளிப்படைத்தன்மை வேண்டும்....
முந்தைய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு(TET) எழுதியவர்களிலிருந்து பணிநியமனம் செய்யப்படுவது குறித்தான தெளிவான கொள்கை முடிவை அரசு அறிவிக்க வேண்டும் – 2012ல் TET தேர்வெழுதி தகுதிபெற்று காத்திருக்கும்500 தேர்வர்களுக்கு முன்னுரிமை தந்து பணிநியமனம் செய்யப்படவேண்டும்.
சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தல்…
பத்திரிகை செய்தி – 25-03-2017
2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழ்நாடு ஆசிரியர்தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில்(பிற்சேர்க்கை) வெற்றி பெற்றும், இது நாள் வரையில்பணியமர்த்தப்படாமல் இருக்கும் 500 தேர்வர்களுக்கு(இடை நிலை ஆசிரியர்கள்) முன்னுரிமை தந்து உடனடியாகபணியாணை வழங்க தமிழக அரசை சட்டப் பஞ்சாயத்துஇயக்கம் வலியுறுத்துகிறது.
ஆசிரியர்கள் நியமனத்தில், வேலைவாய்ப்புஅலுவலகங்களில் பதிவு செய்தவர்களை பணிமூப்புஅடிப்படையில் நியமிக்கும் நடைமுறை முன்னர் தமிழகஅரசால் பின்பற்றப்பட்டு வந்தது. ”கல்வி உரிமை சட்டம்”இயற்றப்பட்ட பின்னர், ஆசிரியர் தகுதி தேர்வு முறைநடைமுறைப்படுத்தப்பட்டது. 2012 ம் ஆண்டு முதல்ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்தேதரவரிசை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 2013 ம் ஆண்டு முதல் மதிப்பு முறையை(வெயிட்டேஜ்) அமல்படுத்தி அதனடிப்படையில் தரவரிசைவெளியிடப்பட வேண்டுமென தமிழக அரசு ஆணையிட்டது.அவ்வாணையின்படி ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும்மதிப்பெண்களுக்கு 60 விழுக்காடு மதிப்பும், DTEd or DEEdஉள்ளிட்ட தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கு 25விழுக்காடு மதிப்பும் மற்றும் பள்ளி மேல்நிலைத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கு 15 விழுக்காடுமதிப்பும் என புதிய மதிப்பு முறையில் கணக்கிடப்பட்டுதரவரிசை தயாரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
2012 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வின் முதல்தாளினைஎழுதிய தேர்வர்கள்(இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்காக), தங்களின் DTEd / DEEd தேர்வுகளைதொடர்ந்து கொண்டிருந்த நிலையில், அவர்களின் கல்விநிறைவு சான்றிதழ்கள் 2013 ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டபிறகே, அவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில்தேர்ச்சியடைந்ததற்கான தகுதிச் சான்றிதழ்கள்வழங்கப்பட்டன. 2012 ம் ஆண்டு பணி நியமனம்பெற்றவர்களை காட்டிலும், தகுதியானவர்களாகவும்திறமையானவர்களாகவும் இருந்தும், தேர்வெழுதியபின்னர் விதிமுறைகள் இடையில் மாற்றப்பட்டதால் இவர்களுக்கு இன்னமும் பணிநியமனம் வழங்கப்படவில்லை.
2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வெழுதியதேர்வர்களோடு சேர்த்து, புதிய மதிப்பீடு முறையில்தரவரிசை நிர்ணயம் செய்யப்பட்டதே இவர்கள்பாதிக்கப்பட்டதற்குக் காரணம். தேர்வெழுதிய போதுநடைமுறையில் இல்லாத விதிகள், பின்னர் இடையில்பின்பற்றப்பட்டது என்பது நியாயமற்ற செயலாகும். இந்தப்பிரச்சனைகளுக்கும் கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்கள் உரியவிளக்கம் பெற மாவட்ட / மாநில கல்வித் துறைஅலுவலகங்களை ஒவ்வொரு முறை அணுகியபோதும்அவமதிக்கப்பட்டும் அலட்சியப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலானபிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்து விவரங்கள்அறிவிக்கப்படவுமில்லை, நேரில் விசாரித்த போது உரியபதிலும் தரப்படவில்லை. இதன் காரணமாக 2012 ம் ஆண்டுபிற்சேர்க்கை தேர்வெழுதிய தேர்வர்கள் மிகுந்தமனஉளைச்சலில் உள்ளனர். அதுமட்டுமில்லாதுதேர்ச்சியடைந்த தேர்வர்களின் தகுதிச் சான்றிதழ்கள், ஏழுஆண்டுகளுக்கு அதாவது 2019 ம் ஆண்டு வரை மட்டுமே செல்லத்தக்கது என்பதனால் மேலும்கவலையடைந்துள்ளனர்.
கூடுதலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2017 ம்ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வினை வரும் ஏப்ரல்மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடத்தவுள்ள நிலையில்அத்தேர்வில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்குபெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
2012 ம் ஆண்டு தேர்வெழுதி தேர்ச்சியடைந்துஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் தேர்வர்களைஉடனடியாக பணியிலமர்த்தும் திட்டத்தினை தமிழக அரசுஅறிவிக்க வேண்டும் எனவும், காலிப் பணியிடங்களைநிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிடாமலிருப்பதுஎதேச்சதிகாரமானது. எனவே, தமிழக அரசு இந்தவிஷயத்தில் உடனடியாக தலையிட்டு துரித நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும், 2012 ம் ஆண்டு தேர்வெழுதிதேர்ச்சியடைந்து வேலை கிடைக்காமல் இருக்கும்பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகைசெய்யவேண்டும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு நியமனங்களில், 2012 தேர்வர்களுக்கு மட்டுமல்லாமல் அதன் பின்னர் தேர்வெழுதி தகுதி பெற்ற தேர்வர்களுக்கும் நீதி வழங்க வேண்டும். தகுதியின் அடிப்படையில், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு பணிநியமனம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்விஷயத்தில் அரசு, உரிய கவனம் செலுத்தாவிடில் பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டி நீதி கேட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றும் தமிழக அரசானது ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படையான கொள்கை முடிவை அறிவிக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.
செந்தில் ஆறுமுகம்,
மாநில பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
87545-80274, 87545-80270
“Transparency needed in school teacher appointments - Policy for appointment to those who cleared TET exam in previous
years should be announced -
Appointment for candidates those cleared
TET-2012 should be given priority -
Nearly 500 eligible
candidates denied jobs as rules changed midway for qualification in TET Exam”
Satta Panchayat - PRESS RELEASE ( 25-03-2017)
Satta Panchayat Iyakkam demands government should
immediately provide job to 500 candidates who achieved eligibility in the
supplementary TNTET exam conducted in October 2012.
Tamil Nadu government earlier has been
recruiting for teachers, based on the seniority from the employment exchange.
After “Right To Education Act”, TET(Teacher Eligibility Test) was introduced.
In 2012, the ranking was based on the TNTET score alone, whereas from 2013
onwards, the govt. mandated a new weightage based system for ranking the
candidates. In the new weightage system, the Tamil Nadu Teacher Eligibility
Test (TNTET) scores accounted for 60% of the total score, DTEd or DEEd exam
marks accounted for 25% and higher secondary board exam marks made up 15% of
the overall eligibility score.
Those candidates who wrote Paper I of the 2012
test while still pursuing their DTEd and DEEd courses, were offered their
eligibility certificates to employment only later in 2013, after producing
their course completion certificates. Despite being equally meritorious in the
test (in cases, more meritorious) than people who were employed from the 2012
batch, many are unemployed due to a change in rules- after they had written the
TET exam.
The victims’ misery is due to their scores being
aggregated and ranked by the new rules along with other eligible members of
2013. This is unfair since such criteria did not exist when they attempted the
test. Adding to these problems, the victims complain that they are treated with
contempt and hostility every time they approached the district level or state
level educational department offices for clarification.
The candidates of this batch are also frustrated
because vacancies and recruitment details for teaching positions from Class I
to V category have neither been announced, nor revealed properly on enquiry.
These qualified candidates are worried now more than ever because their
eligibility certificates, valid only for 7 years, ends in 2019. Additionally,
TNTET is again set to be conducted on the 29th and 30th
of April 2017, and nearly 10 Lakh candidates are expected to appear for the
test.
Hence, Satta Panchayat iyakkam demands that “The State Government should
immediately announce its plan/policy on posting the candidates who have cleared
the exam and pending for years. At present, the announcements in filling
vacancies are arbitrary and the candidates are uncertain when they will get
jobs, despite being eligible. Swift action must be taken and justice offered to
these forgotten candidates of 2012( For Secondary Grade Teachers - who wrote
Paper 1).” Satta Panchayat Iyakkam will continue to stand by and
support these(2012) candidates and any other batch candidates for whom justice
is being denied.
Senthil Arumugam, General Secretary, Satta Panchayat Iyakkam,
87545-80274, 87545-80270
No comments:
Post a Comment