30-12-2015:
To the Editors,
It is very shameful to see that, all these unlawful activities are happening with the support of police and chennai corporation officials. Requesting the media to highlight the issue and write strong editorials against this culture..
To the Editors,
STOP ADMK Gen.Council Meeting: Satta Panchayat sends Representation to ... Election Commission of India, Chief Secretary, Medical Council of India, DVAC, Tamilnadu Housing board
2. Probe the 7.44 acre land(in which ADMK meeting is going to happen) allotment to "Ramachandra Trust" at throw away price when compared to Market value...
1. A Political Party's General Council meeting should not be conducted in a campus meant for educational Institution..
2. Probe the 7.44 acre land(in which ADMK meeting is going to happen) allotment to "Ramachandra Trust" at throw away price when compared to Market value...
Detailed Representation is ATTACHED...
1. கல்வி,ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவது சட்ட விரோதமானது.. தேர்தல் ஆணையம், தலைமைச் செயலாளர், வீட்டு வசதி வாரியம், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, இலஞ்ச-ஒழிப்புத்துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு.
2. மிகக்குறைந்த விலைக்கு 7.44 ஏக்கர் நிலத்தை “இராமச்சந்திரா அறக்கட்டளைக்கு” வழங்கியதில் பலகோடி ஊழல் நடந்திருந்க்க வாய்ப்புள்ளது.. இது குறித்து விசாரணை நடத்தவேண்டும்.
விரிவான விவரங்கள்..இணைப்பில்..
விரிவான விவரங்கள்..இணைப்பில்..
Note: With regard to ADMK's meeting, platforms in Thiruvanmiyur are blocked and people are walking on the road.
It is very shameful to see that, all these unlawful activities are happening with the support of police and chennai corporation officials. Requesting the media to highlight the issue and write strong editorials against this culture..
Thanks,
S.Elango, President
S.Elango, President
Satta Panchayat Iyakkam,
8754580274, 8754580270
8754580274, 8754580270
திருவான்மியூரில் கிரவுண்ட் ரூ.6 லட்சம் விலையில் 7.44 ஏக்கர் விற்பனை : வீட்டுவசதி வாரிய முடிவால் வருவாய் இழப்பு ( 24.07.2014 )
சென்னை, திருவான்மியூரில் ஒரு கிரவுண்ட் - 2,400 ச.அடியை, 6.01 லட்சம் ரூபாய் என்ற விலையில், 7.44 ஏக்கர் நிலத்தை, தனியார் அறக்கட்டளை பெயருக்கு கிரையம் செய்ய, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சென்னை, திருவான்மியூரில், வீட்டுவசதி வாரியத்தின் புறநகர் திட்டங்களுக்காக (நெய்பர்வுட் ஸ்கீம்) பல நுாறு ஏக்கர் நிலங்கள், பல்வேறு தரப்பினரிடமிருந்து, 1986ல் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களை, குடியிருப்பு, வணிக பகுதிகளாக மேம்படுத்தி ஒதுக்கீடு முறையில், வீட்டு
வசதி வாரியம் விற்பனை செய்தது. இதில், திருவான்மியூர், காமராஜ் நகர் பகுதியில் சர்வே எண்கள்: 78/7, 78/8 ஆகியவற்றுக்கு உட்பட்ட, 7.44 ஏக்கர் நிலத்தை கல்வி நிறுவனங்களை நடத்தி வரும், ஒரு தனியார் அறக்கட்டளைக்கு, 1998 ஜூன், 12ம் தேதி, வீட்டுவசதி வாரியம் ஒதுக்கீடு செய்தது.
விலை இந்நிலங்கள், பெசன்ட் நகர் இரண்டாவது விரிவாக்கத் திட்டத்தின் அருகில் அமைந்துள்ளது. மேலும், இந்நிலங்கள் வணிக நோக்கமின்றி, கல்வி, ஆராய்ச்சி பணிகளுக்காக சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஒரு கிரவுண்டுக்கு, 6.01 லட்சம் ரூபாய் என, விலை நிர்ணயம் செய்ய வீட்டுவசதி வாரியம், 1998 அக்டோபர், 10ம் தேதி முடிவெடுத்தது. ஆனால், இந்த முடிவு சில நிர்வாக காரணங்களால் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 2006ல் தனியார் அறக்கட்டளை நிர்வாகம், அரசுக்கு விடுத்த கோரிக்கை அடிப்படையில், ஒரு கிரவுண்ட், 6.01 லட்சம் விலையில், 7.44 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்யவும், இதற்கு, 9.5 சதவீதம் வட்டியும் வசூலிக்க வீட்டுவசதி வாரியம், 2007 மார்ச் 3ம் தேதி முடிவு செய்தது. இந்த முடிவும் செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், கடந்த, 1ம் தேதி நடந்த வீட்டுவசதி வாரிய நிர்வாக குழு கூட்டத்தில், இப்பிரச்னை குறித்து, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
தீர்மானம் : இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: 'திருவான்மியூரில் தனியார் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட, 7.44 ஏக்கர் நிலத்தை, 1998, 2007 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கிரையம் செய்து விற்பனை பத்திரம் கொடுக்கலாம்' என, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு கிரவுண்ட், 6.01 லட்சம் ரூபாய் விலையுடன், 9.5 சதவீத வட்டித் தொகையை
வசூலித்து, கிரையம் செய்து விற்பனை பத்திரம் கொடுப்பதற்கான தீர்மானம், வாரிய நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
வருவாய் இழப்பு : இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்கு, விற்பனை பத்திரம் வழங்கும் போது நிலவும் வழிகாட்டி மதிப்பு, சந்தை விலை ஆகியவற்றை கருத்தில்
கொண்டு தான், இறுதி விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்த விஷயத்தில், இந்த நடைமுறையை கடுமையாக கடைபிடிக்கும் வீட்டுவசதி வாரியம், இந்த விஷயத்தில் மட்டும், 1998ல் நிர்ணயித்த விலையை, 2014ல் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
நியாயமா? : வழிகாட்டி மதிப்பு அடிப்படையிலேயே, திருவான்மியூரில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை, 2 கோடி ரூபாயை நெருங்கி விட்ட நிலையில், 6.01 லட்சம் ரூபாய் என்ற பழைய விலையை, 2014ல் செயல்படுத்தும் இந்த முடிவால், வாரியத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment