Tuesday 29 December 2015

30-12-2015:

To the Editors,

STOP ADMK Gen.Council Meeting: Satta Panchayat sends Representation to ... Election Commission of India, Chief Secretary, Medical Council of India, DVAC, Tamilnadu Housing board

1.  A Political Party's General Council meeting should not be conducted in a campus meant for educational Institution..

2.  Probe the 7.44 acre land(in which ADMK meeting is going to happen) allotment to "Ramachandra Trust" at throw away price when compared to Market value...

Detailed Representation is ATTACHED...

1. கல்வி,ஆராய்ச்சி  நிறுவன வளாகத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவது சட்ட விரோதமானது.. தேர்தல் ஆணையம், தலைமைச் செயலாளர், வீட்டு வசதி வாரியம், மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, இலஞ்ச-ஒழிப்புத்துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு.
2. மிகக்குறைந்த விலைக்கு 7.44 ஏக்கர் நிலத்தை “இராமச்சந்திரா அறக்கட்டளைக்கு” வழங்கியதில் பலகோடி ஊழல் நடந்திருந்க்க வாய்ப்புள்ளது.. இது குறித்து விசாரணை நடத்தவேண்டும்.
விரிவான விவரங்கள்..இணைப்பில்..

Note: With regard to ADMK's meeting, platforms in Thiruvanmiyur are blocked and people are walking on the road. 

It is very shameful to see that, all these unlawful activities are happening with the support of police and chennai corporation officials. Requesting the media to highlight the issue and write strong editorials against this culture..

Thanks,
S.Elango, President
Satta Panchayat Iyakkam,
8754580274, 8754580270








Media News about 7.44 acre land sale in throw away price to “Ramachandra Trust”, 24.07.2014




திருவான்மியூரில் கிரவுண்ட் ரூ.6 லட்சம் விலையில் 7.44 ஏக்கர் விற்பனை : வீட்டுவசதி வாரிய முடிவால் வருவாய் இழப்பு ( 24.07.2014 )
சென்னை, திருவான்மியூரில் ஒரு கிரவுண்ட் - 2,400 .அடியை, 6.01 லட்சம் ரூபாய் என்ற விலையில், 7.44 ஏக்கர் நிலத்தை, தனியார் அறக்கட்டளை பெயருக்கு கிரையம் செய்ய, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சென்னை, திருவான்மியூரில், வீட்டுவசதி வாரியத்தின் புறநகர் திட்டங்களுக்காக (நெய்பர்வுட் ஸ்கீம்) பல நுாறு ஏக்கர் நிலங்கள், பல்வேறு தரப்பினரிடமிருந்து, 1986ல் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களை, குடியிருப்பு, வணிக பகுதிகளாக மேம்படுத்தி ஒதுக்கீடு முறையில், வீட்டு
வசதி வாரியம் விற்பனை செய்தது. இதில், திருவான்மியூர், காமராஜ் நகர் பகுதியில் சர்வே எண்கள்: 78/7, 78/8 ஆகியவற்றுக்கு உட்பட்ட, 7.44 ஏக்கர் நிலத்தை கல்வி நிறுவனங்களை நடத்தி வரும், ஒரு தனியார் அறக்கட்டளைக்கு, 1998 ஜூன், 12ம் தேதி, வீட்டுவசதி வாரியம் ஒதுக்கீடு செய்தது.
விலை இந்நிலங்கள், பெசன்ட் நகர் இரண்டாவது விரிவாக்கத் திட்டத்தின் அருகில் அமைந்துள்ளது. மேலும், இந்நிலங்கள் வணிக நோக்கமின்றி, கல்வி, ஆராய்ச்சி பணிகளுக்காக சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், ஒரு கிரவுண்டுக்கு, 6.01 லட்சம் ரூபாய் என, விலை நிர்ணயம் செய்ய வீட்டுவசதி வாரியம், 1998 அக்டோபர், 10ம் தேதி முடிவெடுத்தது. ஆனால், இந்த முடிவு சில நிர்வாக காரணங்களால் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 2006ல் தனியார் அறக்கட்டளை நிர்வாகம், அரசுக்கு விடுத்த கோரிக்கை அடிப்படையில், ஒரு கிரவுண்ட், 6.01 லட்சம் விலையில், 7.44 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்யவும், இதற்கு, 9.5 சதவீதம் வட்டியும் வசூலிக்க வீட்டுவசதி வாரியம், 2007 மார்ச் 3ம் தேதி முடிவு செய்தது. இந்த முடிவும் செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், கடந்த, 1ம் தேதி நடந்த வீட்டுவசதி வாரிய நிர்வாக குழு கூட்டத்தில், இப்பிரச்னை குறித்து, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

தீர்மானம் : இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: 'திருவான்மியூரில் தனியார் அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட, 7.44 ஏக்கர் நிலத்தை, 1998, 2007 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், கிரையம் செய்து விற்பனை பத்திரம் கொடுக்கலாம்' என, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு கிரவுண்ட், 6.01 லட்சம் ரூபாய் விலையுடன், 9.5 சதவீத வட்டித் தொகையை
வசூலித்து, கிரையம் செய்து விற்பனை பத்திரம் கொடுப்பதற்கான தீர்மானம், வாரிய நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

வருவாய் இழப்பு : இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில், வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்கு, விற்பனை பத்திரம் வழங்கும் போது நிலவும் வழிகாட்டி மதிப்பு, சந்தை விலை ஆகியவற்றை கருத்தில்
கொண்டு தான், இறுதி விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்த விஷயத்தில், இந்த நடைமுறையை கடுமையாக கடைபிடிக்கும் வீட்டுவசதி வாரியம், இந்த விஷயத்தில் மட்டும், 1998ல் நிர்ணயித்த விலையை, 2014ல் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

நியாயமா? : வழிகாட்டி மதிப்பு அடிப்படையிலேயே, திருவான்மியூரில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை, 2 கோடி ரூபாயை நெருங்கி விட்ட நிலையில், 6.01 லட்சம் ரூபாய் என்ற பழைய விலையை, 2014ல் செயல்படுத்தும் இந்த முடிவால், வாரியத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Wednesday 23 December 2015

Give Acknowledgement Slip in flood effected house enumeration - Satta Panchayat Demands

10-12-2015:

தமிழ் அறிக்கை கீழே:

To give relief amount/material to flood affected people, govt is doing door-to-door to prepare the list of affected family. To check how the survey work is being carried out, we went to Saidapet,Jothiammal nagar(Photos attached). Survey work is actively being done by govt staffs with ID cards. But, after collecting all the details from the family, no Acknowledgement slip is given to the family. Considering the previous experiences, definitely this will lead to Confusion,CORRUPTION while distributing relief amount/material.Pls bring this issue to Govt's attention .

Onbehalf of the affected people, Satta panchayat Iyakkam demands that Govt should issue Acknowledgement slip with serial numbers..(Infact serial number is there in the form in which the govt staffs collect data from the family)
Since the list preparation work has just started, it is possible to continue the list preparation work with acknowledgement.


Senthil Arumugam, General Secretary
-SATTA PANCHAYAT,8754580274







ஆசிரியர் அவர்களுக்கு,

இலஞ்ச-ஊழல் முறைகேடுகள், குழப்பங்களைத் தவிர்க்க.....   வெள்ள பாதிப்பு குறித்து - வீடு வீடாக கணக்கெடுப்பின் போது ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்... சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விவரங்களை அரசு ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று திரட்டிவருகிறார்கள். இந்த கணக்கெடுப்புப் பணி எப்படி நடைபெறுகிறது என்று பார்வையிடுவதற்காக இன்று சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகர்(அடையாறு ஆற்றங்கரை) சென்றிருந்தோம்(இணைப்பில் படங்கள்). சீருடை, அடையாள அட்டை அணிந்து பல ஊழியர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பெயர், முகவரி, ரேசன் கார்டு எண், வங்கிக் கணக்கு எண் என பல விவரங்களை தங்களிடம் உள்ள படிவத்தில் குறித்துக்கொள்கின்றனர். 

ஆனால், விவரங்களைக் குறித்துக்கொண்டபின் அந்தக் குடும்பங்களுக்கு ஒப்புகைச் சீட்டு ஏதும் தரப்படுவதில்லை. முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால், நிவாரண பணம்/பொருட்கள் தரப்படும் நேரத்தில் இது பெரிய குழப்பத்திற்கும், இலஞ்ச-ஊழலுக்கும் வழிவகுக்கும். குறிப்பெடுத்த படிவங்கள் காணாமல் போவது,  வேண்டுமென்றே சில பகுதிகளின் படிவங்களை தொலைத்துவிடுவது போன்ற பல்வேறு பிரச்னைகள் எழும்.

 நிவாரண உதவிகள் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதற்கும், குழப்பம்-அலைக்கழிப்பு இல்லாமல் இருப்பதற்கும், கணக்கெடுக்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் வரிசை எண் உள்ள் ஒப்புகைச் சீட்டு தரப்படவேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கணக்கெடுப்புப் பணிகள் இப்போதுதான் துவங்கி இருப்பதால், இதனை உடனடியாக செயல்படுத்த முடியும்...  ஆகவே, இச்செய்தியினை பிரசுரித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டுகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஊடகங்கள் செய்யவேண்டிய உடனடி உதவி இது.

செந்தில் ஆறுமுகம்,
பொதுச்செயலாளர்,
சட்ட பஞ்சாயத்து இயக்கம், 8754580274