Thursday, 7 January 2016

PRESS RELEASE: Reg PIL on VAO...கிராமத்தில் தங்காத VAOக்கள் குறித்த விவரங்களை புகாராக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க பொதுமக்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகோள்…07-01-2016

PRESS RELEASE: 07-01-2016
Within 3 months take action against VAOs who were not residing in their duty villages.. Today,Madras highcourt gives order in Satta Panchayat Iyakkam's Public Interest Litigation..


We requests public, voluntary organisation to report to Collector, if the local VAO is not residing in village. Also send a copy to Satta Panchayat, which will be compiled and submitted in court after 3 months. 

DETAILED PRESS RELEASE  is attached.
Court affidavit @ 
http://spicourtdocs.blogspot.in

Siva Elango, President, Satta Panchayat Iyakkam
8754580274, 8754580270

     சட்ட பஞ்சாயத்து இயக்கம்   பத்திரிகை செய்தி, 07-01-2016

பணிசெய்யும் கிராமத்தில் தங்காத கிராமநிர்வாக அலுவலர்கள்(VAO) மீது
3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…
                 
- சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடுத்த பொதுநல வழக்கில் தீர்ப்பு.

கிராமத்தில் தங்காத VAOக்கள் குறித்த விவரங்களை புகாராக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க பொதுமக்களுக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் வேண்டுகோள்…


 தமிழகத்திலுள்ள 16,564 வருவாய் கிராமங்கள் கிராம நிர்வாக அலுவலரால்(Village Administrative Officer) நிர்வகிக்கப்படுகிறது. இவர்கள், கிராம நிர்வாகத்தில் மிக முக்கிய பொறுப்பை வகிக்கிறார்கள். கிராம வருவாய் சம்பந்தப்பட்ட ஆவணங்களின் விபரங்களை பாதுகாப்பதுடன், அக்கிராமத்தில் நிகழும் இயற்கைக்கு புறம்பான இறப்புகள், சாதி கலவரம், நில ஆக்கிரமிப்பு போன்றவற்றை மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். இவர்களின் பணியின் தன்மையைக் கருத்தில்கொண்டு, VAOக்கள் பணி செய்யும் கிராமத்திலேயே தங்கி பணியாற்றவேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. (Rule 38 (b) (iii) read with Annexure X (Rule 10 of the Annexure) of the Tamil Nadu Ministerial Service Rules which reads as “… Every person appointed to the post shall reside in the village under his charge and shall continue to reside in the said village so long as he holds the post)

கடந்தஆண்டு தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அறிவிப்பு எண். 07/2014, தேதி 17.03.2014 பத்தி 4(1)ல், பணியமர்த்தப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள், அவர்கள் பொறுப்பில் இருக்கும் கிராமத்தில் தங்கி வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளது
கிராமத்தில்தங்கி பணியாற்ற வேண்டும் என்று அரசு விதிமுறை இருந்தும், இது கடைபிடிக்கப்படுவதில்லை. நகரங்களில் தங்கி இருந்துகொண்டு, பணிசெய்யும் கிராமத்திற்கு பார்வையாளர்கள் போல் வந்து சென்றனர் வி.ஏ.ஓக்கள். இதனைத் தடுக்க, 2011ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது(WP:7922). இந்த வழக்கின் மீது,  VAOக்கள் கிராமத்தில் தங்கவேண்டும், இதனை உறுதிசெய்ய மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரசின் உத்தரவு, நீதிமன்ற உத்தரவு எதற்கும் நாங்கள் அடிபணியமாட்டோம், நகரங்களில்தான் தங்குவோம்.. சிலமணி நேரங்கள் மட்டும் கிராமத்திற்கு வந்து வேலை செய்துவிட்டுப்போவம் என்பதுதான் 90% வி.ஏ.ஓக்களின் நிலைப்பாடாக உள்ளது.
இந்த சூழலில் 2015 ஜனவரியில் தமிழகத்தின் 27 மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தோம். காஞ்சிபுரத்தில் இக்கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
அரசின் விதிமுறைக்கே அடிபணியாத நாங்கள், ஒரு பொதுநல இயக்கத்தின் கோரிக்கைக்கா செவிசாய்ப்போம் என்ற எண்ணத்தில் வி.ஏ.ஓ.க்கள் வழக்கம்போல் நகரத்திலேயே தங்கி செயல்பட்டுவந்தனர். இதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் இணைந்து கள ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த் ஆய்வின்போது, வி.ஏ.ஓ. உண்மையில் எங்கு குடியிருக்கிறார் என்பதனை ஆவணப்படுத்தினோம். ஆய்வின் சுருக்கமான விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.


District Name
No.of.Village Panchayat Surveyed
VAO’s stayed in Villages
Percentage of VAOs stayed in Villages
1
Kanchipuram
16
0
0 %
2
Cuddalore
8
0
0 %
3
Erode
10
0
0 %
4
Vilupuram
5
0
0 %
5
Madurai
12
0
0 %
6
Thirunelveli
5
0
0 %

TOTAL
56
0
0 %

 கிராம நிர்வாக அலுவலர்களின் இந்த முறைகேட்டைத் தடுக்க சட்ட பஞ்சாத்து இயக்க மாநில தலைமையகம் கடந்த 20.12.2014 ம் தேதியில் தமிழக முதல்வர், தலைமை செயலர், வருவாய் துறை செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் அவர்களுக்கு புகார் அளித்துள்ளது.

இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பின்னரும், வி.ஏ.ஓக்கள் தாங்கள் பணியாற்றும் கிராமத்தில் தங்கவில்லை என்பதுதான் இன்றைய உண்மைநிலை.
இப்பிரச்னைக்கு அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சட்ட பஞ்சாயத்து இயக்கம் உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடுத்தது(WP:392/2016). வி.ஏ.ஓ.க்கள் கிராமத்தில் தங்கவேண்டும், கிராமத்தில் தங்காத வி.ஏ.ஓ.க்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்த வழக்கில் மூலம் கேட்டுக்கொண்டோம்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இந்த வழக்கு இன்று(07-01-2016) விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பிலிருந்து வாதாடிய வழக்கறிஞர்கள், அனைத்து VAOக்களும் கிராமத்தில்தான் தங்குகின்றனர் என்று சாதித்தனர். அவர்கள் கிராமத்தில் தங்கவில்லை என்ற நமது கள ஆய்வு முடிவுகளை நாம் முன்வைத்தோம்.

வழக்குவிசாரணையின் முடிவில்,

“…பணிசெய்யும்
கிராமத்தில் தங்காத கிராமநிர்வாக அலுவலர்கள்(VAO) மீது 3 மாதத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
….அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி இல்லையெனில், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்ற குறிப்போடு நம் வழக்கை முடித்துவைத்தார் தலைமை நீதிபதி..”

2011ம் ஆண்டின் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதுபோல் இந்த உத்தரவும் தமிழக அரசால் கண்டுகொள்ளப்படாமல் போகலாம். ஆகவே, கிராமத்து பொதுமக்கள், உள்ளூரில் உள்ள சமூக நல ஆர்வலர்கள், அமைப்புகள் களமிறங்க வேண்டுகிறோம். உங்கள் ஊர் வி.ஏ.ஒ. கிராமத்தில் தங்கவில்லை என்றால், உடனே மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளியுங்கள், புகாரின் நகலை சட்ட பஞ்சாயத்து இயக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். 3 மாதத்திற்கு பின்பு, எங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து ஆவணங்களையும், புகார்களையும் தொகுத்து நீதிமன்றத்தில் சமர்பிக்கிறோம்.



சட்ட பஞ்சாயத்து இயக்க முகவரி, தொடர்பு எண், ஈமெயில் முகவரி..

சட்ட பஞ்சாயத்து இயக்கம்,
31, தென்மேற்கு போக் சாலை,
தி.நகர், சென்னை-600017
தொடர்புக்கு: 88704-72177
ஈமெயில்: sattapanchayat@gmail.com

                                                                                                                                                ,
                                                       
சிவ.இளங்கோ,
                                                              தலைவர்,
                                                      சட்ட பஞ்சாயத்து இயக்கம்


                     




No comments:

Post a Comment