Friday, 21 April 2017

டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனத்தில் முறைகேடுகளா..? irregularities in TNPSC appointments..?



 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனத்தில் முறைகேடுகளா..?
             நியமனங்கள் தொடர்பான ஆவணங்களை நேரில் பார்வையிட
                 
சட்ட பஞ்சாயத்து இயக்கம் தமிழக அரசிற்கு  மனு..
                            பத்திரிகைச் செய்தி(21-04-2017)
         
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, நேற்று பதவியேற்றனர். இந்த நியமனங்களில் முறைகேடுகளில் நடைபெற்றுள்ளதா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்த நியமனங்கள் தொடர்பான ஆவணங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக அரசிற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் விண்ணப்பித்துள்ளது( தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 2(J) இன் படி).

கடந்த ஆண்டு 31-01-2016 அன்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையால்  நியமிக்கப்பட்ட 11பேரின் நியமன ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதை(22-12-2016 அன்று) அடுத்து அந்த 11 பேரின் நியமனங்களும் ரத்துசெய்யப்பட்டன. குறிப்பாக, அந்தப்பட்டியலில் ஒருவராக இருந்தவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவருமான ஓய்வுபெற்ற நீதிபதி ராமமூர்த்தியை வேறு எந்தப்பதவிக்கும் நியமிக்கக்கூடாது என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 11 பேரின் நியமனங்களும் அவசர, அவசரமாக(24 மணிநேரத்திற்குள் அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டு ) செய்யப்பட்டது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் அந்த நியமன ஆணை ரத்து செய்யப்பட்டது. அன்று உச்சநீதிமன்றத்தாலும் இந்த ஆணை உறுதிசெய்யப்பட்டது(09-01-2017).
இந்த பின்னணியில், அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்கள் நேற்று புதிதாகப் பதவியேற்றுள்ளனர். திரு.ராஜாராம்...எஸ் உள்ளிட்ட இந்த 5 பேரும்( திரு.ராஜாராம்...எஸ்(ஓய்வு), டாக்டர்..பி.கிருஷ்ணகுமார், .சுப்பிரமணியன், வி.சுப்பையா, .வி.பாலுசாமி)  ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட 11 பேர் பட்டியலில் இருந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.



அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 பேர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளதே தவிர, அவர்கள் எந்த நடைமுறைகளைப் பின்பற்றி நியமிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை. குறிப்பாக, உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கடந்த நியமனத்தை ரத்து
செய்துள்ள சூழலில் தமிழக அரசானது தார்மீக அடிப்படையில் தானே முன்வந்து எந்தெந்த நடைமுறைகளைப் பின்பற்றி நியமனம் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யவில்லைஊழலுக்கும், நிர்வாகச் சீர்கேட்டிற்கும் எடுத்துக்காட்டய்த் திகழும் தற்போதைய ஆளுங்கட்சி செய்துள்ள இந்த நியமனங்களில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதால் நியமனம் தொடர்பான ஆவணங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்ய அனுமதி கோரியுள்ளோம்(தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு  2(J) இன் படி ). அரசு வகுத்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நியமனங்கள் நடந்துள்ளது என்று தமிழக அரசு கருதினால், சம்பந்தப்பட்ட ஆவணங்களை நேரில் பார்வையிட விரைவில் அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.   


சிவ.இளங்கோ,
தலைவர்,
87545-80270, 87545-80274